எங்கள் நிலங்களை எங்களிடம் தாருங்கள் எனக்கேட்டு 302 நாட்கள் போராட்டம் நடத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தின் மனசாட்சி உறக்கத்திலிருந்து எழவேயில்...
எங்கள் நிலங்களை எங்களிடம் தாருங்கள் எனக்கேட்டு 302 நாட்கள் போராட்டம் நடத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தின் மனசாட்சி உறக்கத்திலிருந்து எழவேயில்லை. எங்களை இந்த நல்லாட்சி அரசாங்கமும் மந்தைகளாக கருதுகிறது. ஒரு துண்டு நிலம் கூட மிச்சம் இல்லாமல் எங்களிடம் மீள வழங்கப்படும் வரையில் தொடர்ந்தும் போராடுவோம்.
மேற்கண்டவாறு முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்கள் கூறியுள்ளனர், கேப்பாபிலவு மக்கள் தங்கள் சொந்த நிலத்தை தம்மிடம் மீள வழங்ககோரி கடந்த 302 நாட்களாக தொடர் ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான 432 ஏக்கர் நிலத்தில் 111 ஏக்கர் நிலம் இன்று வியாழக்கிழமை மக்களிடம் மீள வழங்கப்படவுள்ளது.
இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக கேப்பாபிலவு மக்களின் மீள் குடியேற்றதிற்கான போராட்டத்தை தலைமைதாங்கிவரும், ஆறுமுகம் வேலாயுதபிள்ளை கேப்பாபிலவு மக்கள் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட வாறு கூறியுள்ளார். ,தன்போது மேலும் அவர் கூறுகையில்,,றுதியாக மீள்குடியேற்ற
அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுடன் நடைபெற்ற கூட்டத்தில் 187 ஏக்கர் நிலத்தை மக்களி டம் மீள வழங்குவதாக கூறினார்கள். மேலும் எங்கள் கிராமத்தின் வரைபடத்தை காண் பித்து அதில் நாங்கள் கேட்ட சில பகுதிகளையும் 187 ஏக்கருக்குள் அடக்குவதாகவும் கூறி னார்கள். ஆனால் அதற்கு மாறாக நாளை(,ன்று) 111 ஏக்கர் காணியை மக்களிடம் மீள
வழங்க உள்ளார்கள். அதனை விட கொடுமையான விடயம் 111 ஏக்கர் நிலமும் 38 குடும்ப ங்கள் குடியிருந்த நிலம், அந்த மக்கள் விவசாயம் செய்த நிலம், கடற்றொழில் செய்த கரை யோர பகுதிகள், பாடசாலை, சந்தை, மயானம், தேவாலயம், பொது மண்டபம், என சகல வற்றையும் படையினர் தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கபோகிறார்
கள். அப்படியானால் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் மக்கள் தொழில் ,ல்லாமல், வாழ் வாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்ததைபோல் சொந்த நிலத்தில் மீள்குடியேறிய பின்னரு ம் கூட விவசாயம் செய்ய முடியாமல், கடற்றொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுப்பதா? மேலும் கேப்பாபிலவு கிராமத்தில் மக்களுக்கு சொந்தமான நிலம் 432 ஏக்கர். அது 138 குடு
ம்பங்களுக்கு சொந்தமானது. ,ப்போது 111 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டால் 38 குடும்பங் கள் மிகுதி 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்க்கையையே வ hழப்போகிறார்கள். சுமார் 148 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்தே கேப்பாபிலவு மக்களுக் கு சொந்தமான 111 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. சொந்த நிலத்தில் மீள்குடியேறா
மல் நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு 10 வருடங்கள் ,ழப்பீடு கொடுக்க கூடி யளவு நிதியை ,ராணுவத்திற்கு கொடுத்து ,ந்த அரசாங்கம் கேப்பாபிலவு மக்களுக்கு சொந்தமான நிலத்தில் 4ல் ஒரு பகுதி நிலத்தை மட்டும் மீட்டு கொடுத்துள்ளது. அதிலும் கு டியேறும் மக்களுக்கு தொழில் செய்ய நிலம் ,ல்லை. கடற்பகுதி,ராணுவத்தின் கட்டுப்
பாட்டிற்குள், பாடசாலை ,ராணு கட்டுப்பாட்டுக்குள், மயானம் ,ராணுவ கட்டுப்பாட்டு க்குள் என்றால். அந்த நிலத்தினாலும் மக்களுக்கு பயன் ஒன்றும் ,ல்லை. நாங்கள் 302 நாட்கள் மழை,வெய்யில், பனி, புழுதி என எல்லா துன்பங்களையும் தாங்கி கொண்டும் எ ங்கள் நிலத்திற்காக போராட்டம் நடாத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தின் மனச்சாட்சி உற
க்கத்தில் ,ருந்து எழவேயில்லை. ,ந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களைபோல் எங்களை மந்தைகளாகவே கருதுகிறது. ஆகவே கேப்பாபிலவு மக்களுக்கு சொந்தமான ஒரு துண்டு நிலமும் மிச்சமில்லாமல் மீள வழங்கப்படும் வரையில் நாங்கள் தொடர்ச்சியா கள போராட்டங்களை நடத்துவோம் என்றார்.