இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டைப் பகுதிகளில் இருந்து 133.34 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கைய...
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த கேப்பாப்பிலவு மற்றும் சீனியாமோட்டைப் பகுதிகளில் இருந்து 133.34 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரவினால் மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமபதி ஆர்.கேதிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் இராணுவத்தின் வசம் உள்ள பகுதியில் காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வில் வைத்தே குறித்த காணி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு, மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர்.கேதிஸ்வரன், 641 படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் நிசாந்த மானகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வைத்து விடுவிக்கப்பட்ட காணிகள், அளவீட்;டு பணிகள் முடிவடைந்த பின்னர் மிக விரைவில் மக்களுயைட மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்படும் என்று அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.