11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க ...
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஐந்து பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று பிணை வழங்கப்பட்டது.
2008ம் ஆண்டு தலைநகர் கொழும்பில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க கைதுசெய்யப்பட்டார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் அவர் தொடர்ந்து சுமார் 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும்
இந்த வழக்கின் சந்தேகநபர்கள் 4 பேரும் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் 6 பேரும் பிணையில் செல்வதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் 5 சந்தேகநபர்களையும் நிபந்தையுடனான பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.