ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு கிலோ தங்க கட்டிகள் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டன. அவற்றைக் கடத்த முயற்சித்த இருவரும் கைது ...
ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு கிலோ தங்க கட்டிகள் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டன. அவற்றைக் கடத்த முயற்சித்த இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண கடற்படைத் தலைமையகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு கடறபரப்பு ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக காங்கேசன்துறை கடற்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஏழு கிலோ எடைகொண்ட 70 தங்க்க் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்துக்கெ அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தங்க்கட்டிகள் ககைப்பற்றப்பட்டன. தங்கத்தை் கடத்த்முற்பட்ட குற்றசாட்டில் வடமராட்சியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் இன்று யாழ் தெல்லிப்பளையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்துவர் - என்றுள்ளது.