கொக்குவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 நாள் தொடர்ச்சியான காய்ச்சலினால்; வீட்டில் உயிரிழந்துள்ளார். பொன்னையா பிரபாகர...
கொக்குவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 நாள் தொடர்ச்சியான காய்ச்சலினால்; வீட்டில் உயிரிழந்துள்ளார்.
பொன்னையா பிரபாகரன் (வயது 49) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் மருந்தினை உட்கொள்ளவோ, வைத்தியசாலைக்கு செல்வதற்கோ இவர் மறுப்பு தெரிவித்ததுடன் பிடிவாதகுணத்துடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழமை போல் இரவு உணவினை உண்டுவிட்டு தூங்கியுள்ளார்.
அதிகாலை மனைவி எழுப்பிய போது உடல் எந்தவித அசைவும் இன்றி காணப்பட்டுள்ளது.
உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வந்து அனுமதிக்க முற்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இறப்பு விசாரiணையினை யாழ் போதனா வைத்தியசாலையின் திடிர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணைக்கு சடலம் உத்தரவிடப்பட்டுள்ளது.