கைதடி வடக்கு பகுதியில் கிணற்றில் வீழ்ந்த மனைவியினை காப்பாற்ற முற்பட்ட கணவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப்பகுதி மக்களிடையே பெரும் சோ...
கைதடி வடக்கு பகுதியில் கிணற்றில் வீழ்ந்த மனைவியினை காப்பாற்ற முற்பட்ட கணவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்திய இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா வேலாயுதம் (வயது 72) மற்றும் வேலாயுதம் நாகம்மா (வயது 70) என்ற இருவமே உயிரிழந்தவர்கள் ஆவார்.
தற்போது நடைபெற்றுவரும் திருவொம்பாவை பூஜையில் கலந்து கொள்வதற்காக உயிரிழந்த நாகம்மா என்பவர் அதிகாலையில் ஆலயத்திற்கு செல்வது வழமையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றும் அவர் அதிகாலையில் எழுந்து குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார். இதன் போது கால் தவறி கிணற்றில் வீழந்துள்ளார்.
சத்தம் கேட்டு கிணற்றடிக்கு சென்ற போது மனைவி நீரில் மூழ்குவதை கண்டு வேலாயுதமும் கிணற்றில் பாய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வழமையாக கோயில் வரும் நாகம்மா இன்று(02) கோயில் வராததை இட்டு அவரது உறவினர்கள் கோயில் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.
வீட்டில் கணவனையும், மனைவியினையும் காணாத உறவினர்கள் எங்கும் தேடிப்பார்த்துள்ளனர். பின்னர் கிணற்றினை எட்டி பார்த்த Nபுhது இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
ஸ்தலத்திற்கு வந்த திடிர் இறப்பு அலுவலர் எம்.இளங்கீரன் இறப்பு விசாரணையினை மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதணைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வேலாயுதம் நாகம்மா தம்பதிகளுக்கு பிள்ளைகள் இல்லை என பொலிஸார் கூறினர்.
நாளையதினம் உடற்கூற்று பரிசோதணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.