யாழ்ப்பாணம் குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையாகவுள்ள வீடோன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அறை ஒன்றுக்குள்ஙமின் ஒழுக்குக் காரணமாக...
யாழ்ப்பாணம் குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையாகவுள்ள வீடோன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அறை ஒன்றுக்குள்ஙமின் ஒழுக்குக் காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் மட்டுமே தீ பரவியதால் வீட்டிலிருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தீ பரவிய அறைக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் அத்தியவசிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின என்று தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியைச் சேரந்தவர்கள் மற்றும் யாழ். மாநகர தீயணைப்புப் பிரிவினரின் கடும் போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.