கச்சத்தீவுக்கும் நெடுந்தீவு கடற்பபகுதிக்கு இடையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நேற்று(06) இரவு கடற்படையினரால் அடித்து விரட்டப...
கச்சத்தீவுக்கும் நெடுந்தீவு கடற்பபகுதிக்கு இடையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நேற்று(06) இரவு கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
100 க்கு அதிகமான விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் இந்திய மீனவர்களை அடித்து விரட்டியுள்ளனர்.
வழமையான சனிக்கிழமை இரவு இந்தியமீனவர்கள் கச்சைதீவினை அன்மித்த நெடுந்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிப்பதனை வழமையாக கொண்டு வருகின்றனர். கடற்படையினர் தற்போது மீனவர்களை கைது செய்வதுடன், விரட்டியடிக்கும் நடவடிக்கையினை அதிகரித்துள்ளனர்.
இதனால் யாழ்குடாநாட்டின் மண்டைதீவு குருநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள கரையோர மீனவர்கள் கச்சதீவு வரை சென்று மீன்பிடித்து வருவதற்கு கடற்படையினரின் நடவடிக்கை பாராட்டதக்கது என அவ் அதிகாரி கூறினர்.
இந்திய மீனவர்கள் றோலர் மீன்பிடியினால் இலங்கையின் வடக்கு கடல்வளம் அழிவடைந்து வருவதுடன், மீன் இனப்பெருக்கமும் குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.