மால்டோவா நாட்டில் மொடல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மால்டோவா...
மால்டோவா நாட்டில் மொடல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மால்டோவா நாட்டின் பெரும் புகழ்பெற்ற நடிகை, மொடல் மற்றும் பாடகி 31 வயதான Anastasia Cecati. இவரது கணவர் lexei Mitachi(34) பல் மருத்துவராக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று தமது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கத்தியால் தாக்கிய Mitachi, அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் 7-வது மாடில் இருக்கும் தமது குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓராண்டு நீண்ட காதலுக்கு பின்னர் Mitachi கடந்த ஆண்டு மொடல் Cecati ஐ திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 வார பிராயத்தில் ஒரு குழந்தை உள்ளது. Mitachi ஏற்கெனவே திருமணமாகி 4 வயது குழந்தைக்கு தந்தையாவார்.
மொடல் Cecati ஐ சந்தித்த சில நாட்களில் Mitachi தமது காதலை வெளிப்படுத்தியதாகவும், தொடர்ந்து தமது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.