நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசின் ஸ்திரமற்ற நிலையை சுமூகமாக்குவதற்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்று முன்னாள் ...
நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசின் ஸ்திரமற்ற நிலையை சுமூகமாக்குவதற்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இன்று கொழும்பில் நடைபெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்கை நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த மஹிந்த, அதனாலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.