உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ எந்த வித பேச்...
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ எந்த வித பேச்சுக்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராசா ஈபிடிபியுடன் பேசியதாகக் கூறப்படுவதும் முழுப் பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாநகர சபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியாகிய செய்திகள் குறித்து கேட்ட போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த விடயம் சம்மந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
உள்ளுராட்சிசபைகளில் ஆதரவை வழங்குமாறு நாங்கள் ஈபிடிபியுடன் பேசியதாகக் கூறப்படுவது முழுப் பொய். உள்ளுராட்சிமன்றம் சம்மந்தமாக வந்த செய்திகளின் அடிப்படையில் அவர்களுடன் பேசுவதுகுறித்த எந்தஎண்ணத்தையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக தேசியகட்சிகளது ஆதரவைக் கூட நாங்கள் கோரவில்லை. அவ்வாறுகோருவதில் நியாயமும் இருக்கவில்லை எனமேலும் தெரிவித்தார்.
செய்தியாளர் : எஸ்.நிதர்ஷன்