தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் நேற்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான...
தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் நேற்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான குழுவொன்று விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
சம்பவம் தொடர்பில் இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஷேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளக்கு அமைவாக மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாக்குமூலத்திற்கு அமைவாக வௌியாகியுள்ள தகவல்களின் படி கைக்குண்டு ஒன்று வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.