தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் கொள்கை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதிய...
தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் கொள்கை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி அறிமுக மாநாட்டில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஆளும் கட்சிகளை சரமாரியாக விளாசினார்.
மக்கள் நலனே கட்சியின் கொள்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லா முதல்வர்களுக்கும் உள்ள கொள்கை தான் மக்கள் நீதி மய்யத்துக்கும் உள்ளது என்றும், தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்,
சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றும் கமல் கூறினார்.
சாதி மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பேராசையே பற்றாக்குறைக்கு காரணம் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலத்தில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல ரத்தத்தை பெற்று தரவும் முடியும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நலனே கொள்கை கோட்பாடு என அழுத்தமாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.