திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொது இடமொன்றில் கஞ்சா புகைத்த சந்தேகநபர்கள் மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வ...
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொது இடமொன்றில் கஞ்சா புகைத்த சந்தேகநபர்கள் மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோமபுர,மெதகம பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 20 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பொது இடத்தில் கஞ்சா புகைத்ததோடு, தமது உடமையிலும் 50 மில்லி கிராம் கேரள கஞ்சாவினை வைத்திருந்தார்கள் என அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.