அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவன் ஒருவனின் மதிய உணவு பாக்ஸில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று மறைந்திருந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்கு ...
அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவன் ஒருவனின் மதிய உணவு பாக்ஸில் கொடிய
விஷம் கொண்ட பாம்பு ஒன்று மறைந்திருந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று பாடசாலை விட்டு திரும்பிய மாணவனின் மதிய உணவு பாக்ஸை பெற்றோர் திறந்து பார்த்துள்ளனர்.
தினமும் மாணவன் பாடசாலை விட்டு திரும்பியதும், கொண்டு சென்ற உணவு மொத்தமும் சாப்பிட்டுள்ளானா என்பது குறித்து சோதனை இடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதுபோன்றே சம்பவத்தன்றும் சிறுவனின் மதிய உணவு பாக்ஸை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் உலகின் மிக கொடிய விஷப்பாம்பு ஒன்று உள்ளே மறைந்திருந்தது கண்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக அதை புகைப்படமாக பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளனர்.
மட்டுமின்றி எஞ்சிய பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் குறித்த கொடிய விஷம் கொண்ட பாம்பானது மிகவும் அதிகமாக காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 300 பேர் குறித்த பாம்பால் தீண்டப்பட்டு உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த மதிய உணவு பாக்ஸ் புகைப்படமானது பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. பலரும் தங்கள் அனுபவத்தை அந்த புகைப்படத்தில் பகிர்ந்துள்ளனர்.
மதிய உணவு பாக்ஸினுள் பாம்பு எப்படி புகுந்தது, அதை கண்டுபிடித்த பெற்றோர் என்ன செய்தார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சாதாரணம் என கூறப்படுகிறது.