தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு...
தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் கைக்குண்டு ஒன்று வெடித்ததனாலேயே பஸ் தீப்பற்றி எரிந்ததாக இரசாயண பகுப்பாய்வு திணைக்களமும் உறுதி செய்திருந்தது.
நேற்று முன்தினம் அதிகாலையில் தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 19 பேர் காயமடைந்திருந்தமை கூறத்தக்கது.