வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் மூன்றுமாடி கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்றது...
வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் மூன்றுமாடி கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி,கோறளைப்பற்றுக் கோட்டக் கல்விப்பணிப்பாளர் நாகலிங்கம் குணலிங்கம், பிரதி அதிபர்களான திருமதி. அருந்ததி சுந்தரமூர்த்தி, சின்னத்தம்பி பாலமுரளி, பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர் சங்கப் பரதிநிதிகள், மாணவர்கள் எனப்பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
40.3 மீற்றர் ஒ 9.00 மீற்றர் அளவிலான 03 மாடிகளுடன் விஞ்ஞான ஆய்வு கூடம், மற்றும் தொழிநுட்ப ஆய்வுகூடம், வகுப்பறைகள் என்பன அமையவுள்ளது.
அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலைத் (Nளுடீளு) திட்டத்தின் கீழ் 3,2689396.20 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் கல்வியமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இக் கட்டடத் தொகுதி கிடைக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.