மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மார...
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மஞ்சுளா பிரியதர்ஷனி என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சந்தேகநபரான கணவர் வீட்டுக்கு வரும் போது மனைவி தனது கள்ளக் காதலனுடன் வீட்டில் இருந்ததால் கோபமுற்று இருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருவரினதும் நிலமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தேடப்படுகின்ற சந்தேகநபர் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மாரவில கடற்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து 60 வயதுடைய ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.