வடகொரிய தலைவர் கிம் ஜாங் -ன் சகோதரி 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 11-ஆம் திகதி வரை தென்...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் -ன் சகோதரி 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 11-ஆம் திகதி வரை தென் கொரியாவில் இருந்த கிம் யோ ஜாங், குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமது முதல் குழந்தையை பெற்றெடுத்த கிம் யோ, இதுவரை தமது குழந்தை தொடர்பில் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை.
இதுவரை அரசின் முக்கிய விழா எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த கிம் யோ, வடகொரிய தலைவரின் நம்பிக்கையான நபர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
தென் கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதன் பின்னரே உலக ஊடகங்களுக்கு இவரது புகைப்படம் பரவலாக கிடைத்தது.
கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக தென் கொரியாவில் கிம் யோ கலந்து கொள்வதாக வடகொரிய அரசு தகவல் வெளியிட்டது.
அதன் பின்னரே கிம் யோ ஊடகங்களுக்கு முகம் காட்டினார்.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியா உலக நாடுகளின் நம்பிக்கையை பெறும் பொருட்டே, கிம் யோ வை தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தது.