இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் அவர...
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை நான் பார்த்துள்ளேன், அவர்களின் துடுப்பாட்ட முறையை நானும் செயல்படுத்த முயற்சி செய்துள்ளேன்.
விராட் கோஹ்லியிடம் இருந்து சில விடயங்களை நான் கற்றுக் கொண்டேன், குறிப்பாக சுழற்பந்து வீச்சுகளை அவர் எதிர்கொள்ளும் விதம், ஆப்சைடு திசையில் அவர் அடிக்கும் ஷாட்டுகள் ஆகியவற்றை நான் கற்றுக் கொண்டேன்.
அவற்றை நானும் பின்பற்ற, தற்போது முயற்சி செய்து வருகிறேன். நீங்களும் அவரிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம். கோஹ்லியைப் போலவே, டிவில்லியர்ஸிடம் இருந்தும் கற்றுக் கொண்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.