நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மராட்டிய மாநில அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தின் துபாயில் குளியலறை தொட்டியில...
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மராட்டிய மாநில அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் குளியலறை தொட்டியில் வழுக்கி விழுந்து நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தார்.
இதனையடுத்து துபாய் பொலிசாரின் நடைமுறைகள் முடித்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று மும்பை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலர் ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
#WATCH Mumbai: Mortal remains of #Sridevi wrapped in tricolour, accorded state honours. pic.twitter.com/jhvC9pjLMp— ANI (@ANI) February 28, 2018
இதனிடையே மராட்டிய பாஜக அரசால், நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடலுக்கு இந்திய தேசிய கொடியை போர்த்தியுள்ளனர், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தலைவர்கள், முதலமைச்சர்கள், ஆட்சி காலத்தில் இறந்த தலைவர் என முக்கிய பொறுப்பு வகித்தவர்களுக்கு மட்டுமே மூவர்ண கொடியை போர்த்தி அரசு மரியாதை செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் கலைத்துறையை சேர்ந்த ஒருவருக்கு மூவர்ண கொடியை போர்த்தி அரசு மரியாதை செய்துள்ளது பலரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
Mumbai: Mortal remains of #Sridevi wrapped in tricolour, to be cremated with state honours. pic.twitter.com/2XtBcEPHuz— ANI (@ANI) February 28, 2018
மட்டுமின்றி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்குவது தொடர்பில் மாநில முதலமைச்சர் முடிவெடுக்கலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mumbai: Mortal remains of #Sridevi to be cremated with state honours. pic.twitter.com/OC64HUt2rv— ANI (@ANI) February 28, 2018