பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை பதவி நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதமரை பதவ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை பதவி நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோருவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.இந்த தீர்மானத்தை ஜனாதிபதி கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை பதவி நீக்குவது குறித்து, பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
19ம் திருத்தச் சட்டத்தின் 46ம் சரத்தின் அடிப்படையில் பிரதமரை பதவி நீக்க முடியும் என வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சட்ட விளக்கம் கோருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு, சிரேஸ்ட ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.