உலகிலேயே குண்டான ஆண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜூயன் பெட்ரோ பிரான்கோ, தற்போது அதிகளவு எடை குறைந்து நடக்கத்தொடங்கியுள்ளார். ...
உலகிலேயே குண்டான ஆண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜூயன் பெட்ரோ பிரான்கோ, தற்போது அதிகளவு எடை குறைந்து நடக்கத்தொடங்கியுள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூயன் பெட்ரோ பிரான்கோ (33). இவரின் உடல் எடை கடந்த 2016 அக்டோபரில் 595 கிலோவாக இருந்த நிலையில் உலகின் மிக குண்டான ஆண் என அவரின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த ஜூயன் தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து மருத்துவமனையை நாடினார்.
இதையடுத்து அவருக்கு இரண்டு முறை இரைப்பை ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது 345 கிலோவாக எடை குறைந்துள்ளார்.
அடுத்த ஆண்டில் இன்னும் நூறு கிலோ எடை ஜூயன் குறைவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த ஜூயன் தற்போது கைதடி உதவியுடன் நடக்க துவங்கியுள்ளார்.