தற்போது நாட்டில் நிதி நெருக்கடி நிலை உருவாகியுள்ளதால் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வதில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்...
தற்போது நாட்டில் நிதி நெருக்கடி நிலை உருவாகியுள்ளதால் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வதில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி ஆட்சி அமைத்தால் நாம் ஆதரவு வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,
மத்திய வங்கியின் பிணை முறை மோசடி தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என நாடாளுமன்றில் பிரதமர் தெரிவித்தார்.
ஆனால் இது முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடி அறிக்கையில் சந்தேகநபராக அர்ஜூன் மகேந்திரனின் பெயர் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.