சன்னி லியோன், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ஏற்கெனவே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சன்னி லியோன் தற்போது 'வீ...
சன்னி லியோன், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ஏற்கெனவே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சன்னி லியோன் தற்போது 'வீரமாதேவி' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக சன்னி லியோன் அறிவித்துள்ளார்.
சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர் இந்நிலையில் தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சன்னி லியோனும் அவரது கணவரும் நேற்று அறிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர். சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில், "திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21-ம் தேதிதான் தெரிந்துகொண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், "இது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளுடன் போஸ் கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார். உயிரியல் ரீதியாக எங்கள் குழந்தைகள் என்பதில் சந்தேகம் வேண்டாம். வாடகைத்தாய் மூலம் இந்தக் குழந்தைகளை பெற்றிருக்கிறோம்" எனக் கூறியுள்ளார் சன்னி லியோன். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.