அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் -ஸ்டாலின் ஆவேசம்- பா.ஜ.க. அரசும் அ.தி.மு.க. அரசும் இணைபிரியா கூட்டாளிகளாக ச...
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அறிவித்த ஆறுவார காலக்கெடுவிற்குள் அமைக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம் இழைத்து விட்டது.
மத்திய அரசின் கண் அசைவுக்கேற்ப நாடாளுமன்றத்தில் கண்துடைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழ்நாட்டுக்கு இரட்டிப்புத் துரோகம் செய்துவிட்டது.
தீர்ப்பு வெளிவந்த சில தினங்களிலே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியதை தமிழக அரசு வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்தது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை என்று மத்திய நீர் வளத்துறை செயலாளரே பொய் சொன்ன போதும் அதை அரசு தட்டிக் கேட்கவில்லை.
மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையே அலட்சியப்படுத்தி, ஆணவப்போக்கில் செயறு;படுகிறது என்றால், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசோ மத்திய அரசைத் தட்டிக்கேட்க முடியாமல் அடிமை அரசாகக் காலம் கழிக்கிறது. இந்த ஆணவத்தனத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் இடையில் காவிரி மேலாண்மை வாரியம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.
உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.