திரையுலகில் உள்ள நடிகைகளில் சிலர் மட்டுமே படத்திற்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் துணிந்து நடிக்கின்றனர். அதில் ஆண்ட்ரியாவும் ஒருவர்....
திரையுலகில் உள்ள நடிகைகளில் சிலர் மட்டுமே படத்திற்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் துணிந்து நடிக்கின்றனர். அதில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.
தரமணி படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை, இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்தால் தான் வாய்ப்புகள் கிடைக்குமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் நான் கவர்ச்சி உடை அணிந்து நடிப்பதால் அது எனக்கு மகிழ்ச்சியை தந்து விடும் என நினைக்காதீர்கள், நிச்சயம் அப்படியில்லை. நான் நிர்வாணமாக கூட நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் அந்த காட்சி படத்திற்கு அவசியமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.