வடகொரிய ஜனாதிபதி ஹிம் ஜோங் உன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ...
வடகொரிய ஜனாதிபதி ஹிம் ஜோங் உன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
வடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயற்பட்டு வருகிறது.
இதனால் கோபமடைந்த வடகொரியா, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது. அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாகவும், அணுகுண்டுகளை வீசப்போவதாகவும் வடகொரிய ஜனாதிபதி மிரட்டி வந்தார். அதற்கு பதிலடியாக வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.
இதற்கிடையே தென்கொரியா தூது குழுவொன்று வடகொரியாவுக்கு சென்றது. அவர்கள் ஹிம் ஜோங் உன்னை சந்தித்து பேசினார்கள். அப்போது ட்ரம்பபை சந்திக்க விரும்புவதாக ஹிம் கூறினார்.
இந்த விடயத்தை தூது குழுவினர் ட்ரம்பிடம் தெரிவித்ததை அடுத்து அவரும் சம்மதம் அளித்தார்.
இந்நிலையில் ஹிம் ஜோங் உன் சீனா சென்று, சீன ஜனாதிபதியை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிடுமாறு அவர் ஹிம்மை கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஹிம் ஜோங் உன் பேசியது குறித்து சீன ஜனாதிபதி எனக்கு தகவல் அனுப்பியுள்ளார். பேச்சுவார்ர்ih நல்ல விதமாக முடிந்துள்ளது. அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் துரதிருஷ்டவசமாக வடகொரியா மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.