மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (05) இரவு 7.15 மணியளவில் சிலாபம் - க...
மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (05) இரவு 7.15 மணியளவில் சிலாபம் - கொழும்பு வீதியில், மெரவல பகுதியில் இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் 54 வயதான விக்கிரமசிங்க ஹப்புஆமிலாகே அருண என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய 21 வயதான ஹதுருசிங்க நயோன் ருஸிரு பெர்னாண்டோவும் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.