தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தேவயானி. இவர் தற்போது குழந்தைகளை பார்த்து க...
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தேவயானி. இவர் தற்போது குழந்தைகளை பார்த்து கொண்டு குடும்ப பெண்ணாக இருந்து வருகிறார்.
அதே சமயம் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் திரையுலகில் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார். உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
5 ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை படமாக்க உள்ளார். இந்த படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக தேவயானி நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு எப்படி உதவுகிறார்கள் என்பது தான் கதை என கூறப்படுகிறது.