வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை ப...
வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேனுதலை மேற்கொண்ட பொலிஸார் சங்கரத்தை துணைவிப் பகுதியில் ஒன்றரைக் கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காளையடி பண்ணாகத்தைச் சேர்ந்த இளைஞரொருவரையும் கைது செய்துள்ளனர். இன்றையதினம் மல்லாகம் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் வட்டுகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.