ஐபிஎல் தொடரில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் ஹைதராபாத் அணி அதிரடியாக வென்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும...
ஐபிஎல் தொடரில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் ஹைதராபாத் அணி அதிரடியாக வென்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 6வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.
நடப்பு சாம்பியனான மும்பை அணி இன்று எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியது. அதேபோல் ஹைதராபாத் வெற்றியை தொடர தீர்க்கமாய் இருந்தது. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மும்பை அணியில் இருந்து பாட் கும்மின்ஸ் மட்டும் விலகியுள்ளார். அதே போல் ஹர்திக் பாண்டியா, ஹைதராபாத் வீ்ரர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச முடிவெடுத்தது. முதலில் பேட் செய்த மும்பை 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. லீவிஸ் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஹைதராபாத் தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. தவான் 45 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி எளிதாக 148 ரன்கள் இலக்கை அடைந்தது. இதனால் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.