கற்றலுக்கு கட் டிடம் இல்லாத நிலையில் மாணவர்கள் - முழங்காவில் அன்புபுரம் கிளிநொச்சி- முழங்காவில் அன்புபுரம் கி ராமத்தில் உள்ள பாடசாலை மா...
கற்றலுக்கு கட் டிடம் இல்லாத நிலையில் மாணவர்கள் - முழங்காவில் அன்புபுரம் |
முழங்காவில்- அன்புபுரம் கிராமத்தில் உள் ள மாணவர்களுக்காக இக் கிராமத்தின் மு ன்னாள் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் மாலை நேர கற்றலுக்காக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது.
பின்னர் புதிதாக வந்த கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகம் அந்த கட்டிடத்தை இடித்து அழித்ததுடன் கட்டிடம் கட்டுவதற்கு பயன்ப டுத்தப்பட்ட மரம் உள்ளிட்ட மூல பொருட்க ளை விற்பனை செய்துள்ளது.
இந்நிலையில் மாலை நேர கற்றலுக்கு கட் டிடம் இல்லாத நிலையில் மாணவர்கள் காட்டு பகுதி ஒன்றின் தொடக்கத்தில் மரங் களுக்கு மத்தியில் இருந்து மாலை நேர கல்வியை கற்று வருகின்றனர்.
மேலும் இந்த மாணவர்களுக்கு பல்கலை கழக மாணவன் ஒருவன் தன்னிச்சையா க முன்வந்து கட்டணம் எதனையும் பெறாமல் கல்வி போதித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.