ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் திடீரென நுழைந்த சந்தேக நபரால் பரபரப்பு ஜனாதிபதி தலைமையில் பிங்கிரிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற வெசாக் தின...
ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் திடீரென நுழைந்த சந்தேக நபரால் பரபரப்பு
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமையவே பிங்கிரிய காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 67 வயதுடைய கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறித்த நபர் அனுமதியின்றி உள்நுழைய முயற்சித்தமை, குறித்த நிகழ்வின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் அறியப்பட்டமையை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், அவர் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது