ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்...
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.