கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட பாதுகாப்பு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடு...
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட பாதுகாப்பு
பாதுகாப்பு பணிகளுக்காக 3000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று இரவு 7 மணிக்கு பின்னர் சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொம்பனித்தெரு, ஶ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஶ்ரீ உத்தரானந்த மாவத்தை, பிரேபூரூக் ப்ளேஸ், டோசன் வீதி மற்றும் விஜேராம வீதி ஆகிய வீதிகளை அண்மித்த பகுதிகளில் இன்று வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்த சந்தர்ப்பங்களில் குறித்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.