பெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூ...
பெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் கனிய வள அபிவிருத்தி அமைச்சு, நாளொன்றுக்கு மேலதிகமாக 38 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க அத தெரணவிடம் கூறினார்.
இந்த நிலமை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சுக்கு கூட்டுத்தானம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இது சம்பந்தமாக விலைச் சூத்திரம் ஒன்றை வகுப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்த சூத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அதன்படி இந்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாட்டிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
அதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர் கூறினார்.