ஹவாய் எரிமலை இன்னும் எரிமலைக் குழம்பை கொப்புளித்துக் கொண்டு இருக்கிறது. ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை சுமார் 230 அடி உயரத்திற்கு எரிமலைக...
ஹவாய் எரிமலை இன்னும் எரிமலைக் குழம்பை கொப்புளித்துக் கொண்டு இருக்கிறது.
ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை சுமார் 230 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்பை காற்றில் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது, அதாவது 23 மாடிக் கட்டிடம் ஒன்றின் உயரத்திற்கு எரிமலைக் குழம்பு காற்றில் வீசி எறியப்படுகிறது. இதுவரை 30 வீடுகளை எரிமலைக் குழம்பு விழுங்கிவிட்டது.
காற்றில் பரவும் சல்பர் டை ஆக்சைடு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் சுமார் 2000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் 6.9 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கம் ஒன்றைத் தொடர்ந்து ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை வெடித்தது.
சாலைகளைப் பிளந்துகொண்டு எரிமலைக் குழம்பு வெளியேறி வருகிறது.
இது அப்படியே பரவி கிளைகளாக பிரிந்து மென்மேலும் பல இடங்களுக்கு பரவி வருகிறது. எங்கே எப்போது மீண்டும் எரிமலைக் குழம்பு வெளியாகும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க இயலவில்லை.
வெளியாகியுள்ள வீடியோக்களில் பிளவுகளிலிருந்து ஆரஞ்சு நிறத்தில் எரிமலைக் குழம்பு வெளியாவதும், கொப்புளித்து வெளி வருவதையும் காணலாம்.
இந்த பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றாலும் பிள்ளைகள் எப்போது வீடு திரும்புவோம் என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.