இரணைதீவு மக்கள் தம் சொந்த நிலத்தில் மீள்குடியேறும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட் டுள்ள உரிமையை சரியாக பயன்படுத்தியுள்ளார்கள். அவர்களை இன...
இரணைதீவு மக்கள் தம் சொந்த நிலத்தில் மீள்குடியேறும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட் டுள்ள உரிமையை சரியாக பயன்படுத்தியுள்ளார்கள். அவர்களை இனிமேல் வெளியேற்ற நினை த்தால் மக்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம். என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைதீவில் 26 வருடங்களின் பின்னர் தாமாகவே மீள்குடியேறியிருக்கும் மக்களை வடமாகாண முதலமைச்சர் இன்று(14) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்கவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றோம். ஆனால் மிக தாமதமாகவே வழங்கப்படுகிறது. இரணைதீவு மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை தங்களிடம் மீளத் தருமாறு கேட்டு போராட்டம் நடத்தியபோதும் மக்களுடைய காணிகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மக்கள் தம் சொந்த நிலத்தில் மீள்குடியேறும் சர்வதேச ரீதியாகவுள்ள உரிமையை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்கள். மக்களின் காணிகளை மக்களிடம் மீள வழங்குவோம் என அரசாங்கம் ஜெனீவா உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் உடன்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. போருக்குப் பின்னர் அதாவது 2009ம் ஆண்டு மே 18ம் திகதிக்குப் பின்னர் இலங்கை இராணுவம் 3 தவறுகளைச் செய்துள்ளது. முதலாவது தவறு மக்களுடைய காணிகளை தேவைக்கு மேலதிகமாக பிடித்து வைத்துள்ளமை.
இரண்டாவது தவறு போர் நிறைவடைந்த பின்னர் மக்களிடம் மீள கொடுக்கப்பட வேண்டிய காணிகளை மக்களிடம் கொடுக்காமல் காரணங்களை கூறிக்கொண்டு அங்கேயே இருப்பதற்கு முயற்சிக்கின்றமை.
3வது மக்களுடைய மீன்பிடி, விவசாயம் வணிகம் என சகல விடயங்களும் மக்களுக்கு பாதகமாக நடந்து கொள்கின்றமை. இதனை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு கூறியிருக்கின்றோம். ஆனால் ஒன்றும் நடப்பதாக இல்லை.
வெளிநாட்டின் குரல் வந்தால் மட்டுமே அவர்களுடைய கை, கால்கள் மெதுவாக அசைகின்றன. இரணைதீவு மக்கள் தமக்குள்ள உரிமையை சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அதனாலேயே நான் உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன்.
மேலும் இரணைதீவை விடுவிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கும். எனவே அந்த விடயத்தில் இறுதி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.
அந்த இடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சே இருக்கின்றது. நாங்கள் இரணைதீவில் மக்கள் வாழ்ந்த காணிகளுக்கான ஆவணங்களை பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அந்த ஆவணங்களை காண்பித்து மக்களின் காணிகளை மக்களிடம் கொடுங்கள் என அழுத்தமும் கொடுப்போம்.
மேலும் இரணைதீவை விடுவிக்க அரசாங்கம் பல காரணத்தை கூறுகிறது. குறிப்பாக பாதுகாப்பு என கூறும். இந்தகாலத்தில் பாதுகாப்பு என்பது நான்கு சுவருக்குள் இருந்து கொண்டு செய்யலாம்.
மேலும் இரணைதீவில் 3 ஏக்கர் காணியிலேயே கடற்படையினர் இருக்கின்றனர். ஆனால் முழு தீவையும் பாதுகாப்பு காரணம் காட்டி பிடித்து வைத்திருக்கின்றார்கள். இந்த விடயத்தை அறிவதற்கு முன்னர் இரணைதீவில் முழுமையாக கடற்படையினர் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆகவே இது பேசி தீர்க்கப்படவேண்டிய விடயம்.
அதேபோல் இரணைதீவில் தமக்குள்ள உரிமையை பயன்படுத்தி குடியேறியுள்ள மக்களை இரணைதீவிலிருந்து இனிமேல் எவரும் வெளியேற்ற இயலாது. அவ்வாறு வெளியேற்றப்பட்டால் மக்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம் என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.