அமெரிக்கா ஈரான் மீது தடைகள் விதிப்பதாக எச்சரித்துள்ளதால் ஈரானிலுள்ள சுவிஸ் நிறுவனங்கள் அச்சம் அடைந்துள்ளன. அமெரிக்கா ஈரான் மீது தடைகளை ...
அமெரிக்கா ஈரான் மீது தடைகள் விதிப்பதாக எச்சரித்துள்ளதால் ஈரானிலுள்ள சுவிஸ் நிறுவனங்கள் அச்சம் அடைந்துள்ளன.
அமெரிக்கா ஈரான் மீது தடைகளை விதிக்க இருப்பதாகவும், தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் அச்சமடைந்துள்ள பல பெரிய சுவிஸ் நிறுவனங்கள் ஈரானிலிருந்து புறப்படத் தயாராகுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஈரானிலுள்ள சுவிஸ் நிறுவனங்கள் இரண்டு வாரங்கள் முன்பே புதிய வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவதை நிறுத்திவிட்டதாக பல சுவிஸ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிஸ் - ஈரான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவரான Sharif Nezam-Mafi, பல சுவிஸ் நிறுவனங்கள் ஈரானிலுள்ள தங்கள் கிளை நிறுவனங்களை மூட இருப்பதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அவர் ஈரானிலுள்ள முக்கியமான சுவிஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்ததாகத் தெரிகிறது.
இருந்தாலும் பொறியியல் நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கச்சாப் பொருட்களை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் சேவைத்துறை ஆகியவை எவ்வாறு அமெரிக்கக் கொள்கையால் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம் சுவிஸ் வியாபார சமூகத்தை காப்பாற்ற ஏதாவது செய்யும் என நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக ஈரானுக்கு செல்லவுள்ளதாகத் தெரிகிறது.
சுவிட்சர்லாந்தும் ஈரான் அதிபரை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது, என்றாலும் அதிகாரப்பூர்வ திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.