யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து , குடும்பத்த...
யாழ்.தென்மராட்சி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து , குடும்பத்தாரை அச்சுறுத்தி , நகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்ற கொள்ளையர்கள் .
அதன் போது . தாலி கொடி , காப்புகள் உள்ளிட்ட 10 பவுண் நகை , 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் நால்வரும் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்ததாக வீட்டில் இருந்தவர்கள் போலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
செய்தியாளர் : மயூரப்பிரியன்