சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே 12 ஆம் திகதி நடந்த வரலாற்று ...
சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே 12 ஆம் திகதி நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.
அணு ஆயுதத்தை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், சந்திப்பு முடிந்து வெளியில் வந்த வட கொரிய அதிபர் கிம்மிடம், உங்கள் நாட்டை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவீர்களா என்று இருமுறை பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் வட கொரிய அதிபர் சென்றுள்ளார்.