சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (வியாழக்கிழமை) இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் விசேட இடைக்கால அறிக்கையை வெளியிடவுள்ளது...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (வியாழக்கிழமை) இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் விசேட இடைக்கால அறிக்கையை வெளியிடவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிந்துரைகளை இந்த இடைக்கால அறிக்கை பிரதிபலிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகத்தினால் குறித்த முக்கிய இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பரிந்துரைகளை இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த இடைக்கால அறிக்கையை கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.