பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்த...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
நேற்று (11) காலை 29 பேர் கட்சியில் அங்கத்துவம் பெற்றதுடன் நேற்று மாலை மேலும் நால்வர் கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி தலைவர் டபிள்யூ. டீ.ஜே. செனவிரத்ன, பிரேமலால் ஜயசேகர மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏர்ல் குணசேகர மற்றும் பீலிஸ் பெரேரா ஆகியோரும் கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்
.