தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்கென உருவாக்கப்பட்ட வடமாகாண சபை எவ்வித அதிகாரங்களுமற்ற நிலையில் தமது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துள்ள நில...
தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்கென உருவாக்கப்பட்ட வடமாகாண சபை எவ்வித அதிகாரங்களுமற்ற நிலையில் தமது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது தற்போதும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் உட்பட நாட்டுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர்.
இராணுத்தினால் சுவீகரிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அவர்களது பயன்பாட்டில் காணப்பட்ட தமிழ் மக்களது பெறுமதி வாய்ந்த காணிகள் தற்போது தரிசாகியுள்ள நிலையில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச செலயகத்துக்கு உட்பட்ட தெல்லிப்பளை பிரதே சபைக்கு உட்பட பகுதியில் உள்ள மக்களது காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் இன்னும் மூவாயிரத்து நானூறு ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச சபை தலைவர் சந்திரலிங்கம் சுகிர்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றப் பிரதேசமாக தெல்லிப்பளை பிரதே சபைக்கு உட்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து கூர்மை இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு... தெல்லிப்பளை பிரதேச சபை தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள சபையில் சட்டவாட்சி எவ்வாறு காணப்படுகின்றது? எங்களைப் பொறுத்தவரை வடக்கு மாகாண சபை முதலில் நியதிச் சட்டங்களை உருவாக்கி அதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். அதன் பின்னர் எங்களது சில திருத்தங்களையும் உள்ளடக்கி நாங்கள் மீண்டும் அதனை வெளியிட வேண்டும். ஏற்கனவே மாகாண சபையால் வெளியிடப்பட்ட நியதிச்சட்டங்கள் இந்தப் பிரதேச சபை உருவாக்கப்பட முன்னரே வெளியிடப்பட்டுள்ளன.
அதனையே நாங்கள் தற்போது பின்பற்றி வருகின்றோம். புதிதாக மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ள இந்தப் பகுதியில் தீயணைப்பு சேவை காணப்படுகின்றதா? தீயணைப்பு சேவை என்பது யாழ்ப்பாணத்தில் நகரசபையில் மாத்திரமே இருக்கின்றது. தற்போது அதனை மாநகர சபைக்கும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதானமாக மாகாண அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆளணிப்பற்றாக்குறை. 2015 ஆம் ஆண்டிலிருந்து பல நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளக பதவி உயர்வு அதாவது மேற்பார்வையாளர் போன்ற பதவிகளுக்காக நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அவற்றை சீர் செய்த பின்னர் இது போன்ற வசதிகள் எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். கடந்த 30 வருடங்காக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இந்த வீதிகள் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்டதா? தெல்லிப்பளை பிதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள். ஏனைய பிரதேச சபை போன்றதல்ல இது. நாளாந்தம் விடுவிக்கப்படும் காணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்போது வீதி அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்ந்தும் காணப்படுகின்றது. எனினும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 80 வீதமான வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்கின்றீர்கள். அவ்வாறாயின் இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ள காணிகள் எவ்வளவு? தெல்லிப்பளை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மூவாயிரத்து நானூறு (3400) ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. வலிகாமம் வடக்கு பிரதே செயலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகளின் எண்ணிக்கை குறைவு.
இங்கு பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே அதிகம். இதில் விமான நிலையம் அமைப்பதற்காக 325 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் 650 ஏக்கர் காணியை சுவீகரிக்கவுள்தாக அரச வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் அதற்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதனால் அந்த நடவடிக்கை முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டனவா? பிரதேச செயலகத்தின் ஊடாகவே உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குள் அரச மற்றும் அச சார்பற்ற நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் வாழ்வாதாரம் தொடர்பில் அதிகளவு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்தொழிலாளர்களுக்கு அதற்கான உபகரணங்களான வலைகள் படகுகள் வழங்குதல். விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் விவசாய உள்ளீடுகள் வழங்குதல் போன்றன நடைபெறுகின்றன. கடந்த 30 வருடங்களாக தற்காலிக இடங்களில் தங்கியிருந்த பின்னர் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருக்கின்றார்கள். இவ்வாறு குடியேறியவர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளனவா? வீட்டுத்திட்டம் என்பது தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட பகுதியில் மிகப் பிரதானமான பிரச்சனையாக காணப்படுகின்றது. இந்தப் பிரதே சபைக்கு உட்பட்ட பகுதிகள் கட்டம் கட்டமாகவே இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்படுகின்றன. அதனால் மக்கள் கட்டம் கட்டமாகவே தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வரை மீள்குடியேறிய மக்களுக்கு உரிய முறையில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே 5000 மில்லியன் மற்றும் 3000 மில்லியன் நிதியுதவி கிடைத்தது. எனினும் 2018 ஆம் ஆண்டு 300 மில்லியன் நிதி மாத்திரமே கிடைத்தது. அதில் மிக குறைந்த தொகையான 30 மில்லியனே பயன்படுத்தப்பட்டது. மிகுதி வாழ்வாதாரம் உட்பட பல தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இதனை ஒரு துரதிஸ்டவசமான ஆண்டாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஒரு வீட்டுத்திட்டம் கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை. சுமார் 800 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட போதும் வீட்டுத்திட்டம் எதுவும் வழங்கப்படாததனால் மக்கள் தமது காணிகளுக்குள் மலசலகூடத்தை மாத்திரம் அமைத்துவிட்டு தற்காலிக கொட்டில்களை அமைத்து அதில் தற்காலிகமாக குடியேறி வசிக்கின்றனர். வீதி அபிவிருத்தி என்பது வெவ்வேறு நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டாலும் கூட கடற்றொழில் மற்றும் விசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் தங்க இடமின்றி சிரமப்படுகின்றனர். இராணுவம் வசமிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் 2019 ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் அதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மீளக்குடியேறியுள்ள மக்களது வாழ்வாதார நிலை தற்போது எவ்வாறு காணப்படுகின்றது? வாழ்வாதாரத்துக்கான அடிப்படைத் தேவைகள் பிரதேச சபையால் வழங்கப்பட்டுவருகின்றன. கடற்தொழிலாளர்களுக்கு அதற்கான உபகரணங்களான வலைகள் படகுகள் வழங்குதல். விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் விவசாய உள்ளீடுகள் வழங்குதல் போன்றன நடைபெறுகின்றன. அத்துடன் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. கடந்த காலத்தில் வலிகாமத்துக்கும் வடமராட்சிக்கும் இடையிலான பிரதான கடற்போக்குவரத்து பாதை மூடப்பட்டிருந்தது.
தற்போது அந்தப் பாதை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை அதன் ஊடாக போக்குவரத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைப்படுத்தல் தற்போது இலகுபடுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வீட்டுத் திட்டமே இங்கு பிரதான பிரச்சனையாக உள்ளது. தெல்லிப்பளை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை எடுத்துக்கொண்டால் இங்குள்ளவர்கள் இரு தொழில்களை செய்பவர்களாக உள்ளனர். அதாவது அரச உத்தியோகம் மேற்கொள்பவர்கள் விவசாயத்தையும் பகுதி நேரத் தொழிலாக செய்திகின்றனர். இதனால் விவசாயம் செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்களினுடைய அடிப்படைப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒன்றாக காணப்படுவதனால் அரச உத்தியோகத்தர் என்ற தடை நீக்கப்பட வேண்டும்.