கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உலங்கு வானூர்தி ...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உலங்கு வானூர்தி மூலம் பார்வையிட்டள்ளார்.
இன்றைய தினம் மேற்படி இரு மாவட்டங்களினதும் பாதிப்பு நிலமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமங்க கிளிநொச்சிக்கு
வருகை தந்திருந்தார். இதன்போது பிரதமரும் மேலும் சில அமைச்சர்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை உலங்கு வானூர்தியில் இருந்தவாறு பார்வையிட்டுள்ளனர்.