பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்...
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை, நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதிவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெயிட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சராகச் செயற்பட்டு வந்த மங்கள சமரவீர, ஊடகத்துறை அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார். இதையடுத்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று மாலை (22) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.