யாழ்.மருத்துவ பீடத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்த யாழ்.பல்கலைக்கழகத்தி...
யாழ்.மருத்துவ பீடத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்தும் இந்த மருத்துவ கண்காட்சிக்கு அனைவரையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் அடிப்படை விஞ்ஞானம். மருத்துவத் துறையின் நவீன முன்னேற்றங்கள். சுகாதார தொழில் வாய்ப்புகள். நிகழ்கால சுகாதாரச் சவால்கள். சிறுவர் ஆரோக்கியம். பருவ ஆரோக்கியம். வயது வந்தோரின் ஆரோக்கியம். முதியோர் சுகாதாரம் என எட்டுப் பிரிவுகள் பல உப பிரிவுகளை உள்ளடக்கியதாக காட்சிப் பொருள்கள் காட்சிப்படுத்தவுள்ளன.