இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் அ...
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தினையும் அது தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இரா சம்பந்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.