இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார் மட ஆன்சனேயர் ஆலயத...
இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார் மட ஆன்சனேயர் ஆலயத்தில் இன்று காலை 8 மணிக்கு அடையாள உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பில் போராடடத்தில் ஈடுபடடவர்கள் தெரிவித்ததாவது,
இந்து சமயத்துக்கு எதிராக அண்மைக்காலமாக வன்முறைகள் திதிட்டமிட்ட வகையில் அரங்கேறி வருகின்றது.குறிப்பாக வடக்கு கிழக்கில் பாரிய மத மாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.அத்துடன் இந்து ஆலய சிலைகள் விஷமிகளினால் திடடமிட்டு உடைக்கப்படுகின்றன.இது மதத்தை இழிவு படுத்துவதுடன் மத வன்முறையை தூண்டுகின்றது.மேலும் இந்துக்களின் பகுதிகளில் பிற மத வழிபாட்டு தலங்கள் பெருகி வருகின்றது.திட்டமிட்ட வகையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.எனவே இவைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.அதற்காகவே இந்த அடையாள உணவு ஒறுப்பு போராடடத்தில் ஈடுபட்டுள்ளோம்.இந்து மதம் மீதான வன்முறைகளும் அடக்கு முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.அதற்கு எமது மக்கள் பிரதிநிதிகளும் பங்காற்ற வேண்டும் என்றனர்.